முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பா -குமாரசாமி இடையே ரகசிய உடன்பாடு?

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர், செப்- 1 - கர்நாடகாவின் முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா-குமாரசாமி இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் சுரங்க ஊழல் வழக்கில் தப்ப திட்டமிட்டிருப்பதாவும் தெரிய வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பணம் கொழிக்கும் சுரங்க தொழில்களுக்கு உரிமம் அளிப்பதில் எடியூரப்பா-குமாரசாமி ஆகிய இருவரின் மீதும் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கோர்ட்டுகளிலும், லோக் ஆயுக்தா கோர்ட்டிலும் வர்கள் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக எடியூரப்பா முதல்வர் பதவியை இழந்தார். தற்போது அவருக்கு கோர்ட் முன்ஜாமீன் கூட கொடுக்கவில்லை. குமாரசாமியும் இதேபோல் ஜாமீன் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளார். எனவே அவர்கள் இருவருமே கைது செய்யப்படலாம் என்பதற்ரான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. இதனால் அவர்கள் இருவரும் முன்பகையை மறந்து ஒருவரையொருவர் காப்பாற்ற ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. எடியூரப்பாதான் முதலில் சமரச நடவடிக்கையை தொடங்கினார். முதலில் தயங்கிய குமாரசாமி பிறகு உடன்பாட்டிற்கு வந்துவிட்டார். அவர்களது ரகசிய உடன்பாட்டின்படி கோர்ட்டில் அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை பலவீனப்படுத்தும் படி நடந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது வாதங்களை சொதப்பலாக்கி தப்பிக்க தீர்மானித்துள்ளனர். இந்த திட்டத்தின் படி ரகசிய உடன்பாடு வெற்றி பெற்றால் கர்நாடகாவில் அடுத்த தேர்தலை பா.ஜ.க- மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!