முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோகா குரு ராம்தேவ் மீது அண்ணிய செலாவணி மோசடி வழக்கு பதிவு

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 2 - யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது அறக்கட்டளை மீது மத்திய அமுலாக்க பிரிவானது அண்ணிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. ஊழலை ஒழிக்க யோகா குரு ராம்தேவ் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தவர். அவரும், அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருக்கும்போது போலீசார் அங்கு புகுந்து அவர்களை அடித்து விரட்டினர். இதனால் பெரும் பிரச்சினை உருவாகியது. பின்னர் டேராடூன் அருகே அவரது ஆசிரம வளாகத்தில் ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் ராம்தேவ் பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வுகாணப்பட்டு உண்ணாவிரதத்தை ராம்தேவ் வாபஸ் பெற்றார். ஊழலுக்கு எதிராக ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தாலும் அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்தநிலையில் அண்ணிய செலாவணி மோசடி செய்ததாக அவர் மீதும் அவரது ஹரித்வார் அறக்கட்டளை மீதும் மத்திய அமுலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கியன் அறிக்கை மற்றும் ராம்தேவ் அறக்கட்டளையின் ரகசியமான நிதி நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து கிடைத்துள்ள ஆதாரத்தின் அடிப்படையிலும் மத்திய அமுலாக்கப்பிரிவினர் இந்த வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக ராம்தேவ் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்தது குறித்தும் அறக்கட்டளைக்கு அனுப்பட்ட ரசீதுகள் குறித்தும் மத்திய அமலாக்கப்பிரிவு விசாரணையை நடத்தியது. அதில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கூறி ராம்தேவ் மீதும் அவரது ஹரித்வார் அறக்கட்டளை மீதும் அண்ணிய செலாவணி நிர்வாக சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தம்பதிகள்,ராம்தேவுக்கு வெகுமதியாக கொடுத்தது தொடர்பாக நடந்த நிதி பரிவர்த்தனை குறித்து தகவல் கிடைக்க உதவும்படி பிரிட்டன் அதிகாரிகளை மத்திய அமலாக்கப்பிரிவினர்  கேட்டுக்கொண்டனர். ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி  யோகாபீடம் அறக்கட்டளை, திவ்ய யோகா மந்தீர் அறக்கட்டளை பாரத் ஸ்வபிமன் அறக்கட்டளை ஆகியவைகளுக்கு பணம் வருவது மற்றும் அந்த அறக்கட்டளைகளின் பண பரிவர்த்தனை குறித்தும் மத்திய அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்த எண்ணியுள்ளதாக தெரிகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!