முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிக்குள் பஸ் விழுந்து 9 பேர் பரிதாப சாவு

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

டேராடூன், செப்.- 5 - உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில் டைனி என்ற இடத்திற்கு அருகே ஒரு ஆற்றில் பஸ் விழுந்ததில் அதில் பயணம் செய்த 60 பயணிகளில் 9 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். 30 பேரை காணவில்லை. காயம் அடைந்த 18 பேரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான பஸ் டைனி என்ற இடத்தில் இருந்து டேராடூனுக்கு போய் கொண்டியிருந்தது. செல்லும் வழியில் ஓட்டுனர், தனது கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் உருண்டு தோன்ஸ் நதிக்குள் விழுந்தது. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அதிகாரிகள் விரைந்துவந்து மீட்பு மற்றும் தேடும் பணியில் ஈடுபட்டனர். மற்றொரு இடத்தில் ஒரு கார் நதிக்குள் விழுந்தது. இதில் பயணம் செய்த ஒருவர் மீட்கப்பட்டார். 2 பேரை காணவில்லை. இந்த விபத்துகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony