Idhayam Matrimony

பாபா சொத்தை கொள்ளை அடிக்க சென்றர்வகள் ஏமாற்றம்

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

ஐதராபாத்,செப்.20 - சாய் பாபாவின் சொத்துக்கள் ஏராளமாக இருக்கலாம் என்று கருதி ஒரு வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் வெறும் 7 பவுன் நகையுடன் மட்டுமே ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். சாய் பாபா ஆசிரம நிர்வாகிகளில் ஒருவர் நாராயண ராஜூ. இவரது சொந்த ஊர் புட்டப்பர்த்தியாகும். அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தும்குந்தா அருகே உள்ள மத்திபல்லிக்கு குடிவந்துவிட்டார். அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறார். சாய் பாபா இறந்தவுடன் அவரது புட்டப்பர்த்தி ஆசிரமத்தில் இருந்து ஏராளமான நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் எடுத்துவரப்பட்டு நாராயண ராஜூ வீட்டில்தான் வைக்கப்பட்டுள்ளது என்ற வதந்தி நிலவியது. இதை கேள்விப்பட்ட கொள்ளையர்கள் அந்த வீட்டை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். கடந்த ஞாயிறு அன்று நள்ளிரவு 1.15 மணிக்கு கொள்ளையர்கள் பலர் சேர்ந்து நராயாண ராஜூ வீட்டுக்கு வந்து தட்டியுள்ளனர். நாராயண ராஜு கதவை திறந்தவுடன் கொள்ளையர்கள் நுழைந்து சாய்பாபாவின் நகைகளையும் ரூபாயையும் எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று அரட்டி கேட்டுள்ளனர். எங்களிடம் சாய்பாபாபின் சொத்துக்கள் எதுவும் இல்லை என்று நாராயண ராஜூம் குடும்பத்தினரும் பயந்து போய் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவர்கள் மீது மிளகாய் தூளை தூவிவிட்டு, நாராயண ராஜூ மற்றும் அவரது மனைவி,பிள்ளைகளை கம்பால் தாக்கிவிட்டு வீடு முழுவதும் நகை, பணம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர். ஆனால் வீட்டில் வெறும் 7 பவுன் நகை மட்டுமே இருந்தது. அதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அந்த 7 பவுன் நகையையாவது எடுத்துச்செல்லலாம் என்று நினைத்து அதையும் எடுத்துச்சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் அருகில் இருப்பவர்களாகத்தான் இருக்கலாம் என்று தெரிகிறது. கொள்ளையர்கள் கம்பால் அடித்ததில் நாராயண ராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதனால் வேதனை அடைந்த கொள்ளையர்களில் ஒருவன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜில் இருந்த ஐஸ் கட்டியை எடுத்த அந்த புண்ணில் வைத்துள்ளான். அதனால் கொள்ளையர்கள் அருகில் உள்ளவர்களாகத்தான் இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்கள் அனைவரும் 20 வயதுக்குள்ளவர்கள்தான் என்றும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago