முக்கிய செய்திகள்

கவர்னர் ரோசய்யா சென்னை திரும்பினார்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, செப்.24 - தமிழக கவர்னர் ரோசய்யா ஊட்டியில் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரோசய்யா பதவியேற்றபின் முதன் முறையாக நேற்று முன்தினம் தனது மனைவி சுபலட்சுமியுடன் ஊட்டி வந்தார். ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருந்த அவர் மூன்று நாட்கள் ஊட்டியில் தங்கி சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென தனது நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். ஊட்டி ராஜ்பவனிருந்து தீட்டுக்கல்லில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு கார்மூலம் பயணித்தார். ஹெலிகாப்டர் தளத்தில் செய்தியாளர்கள் கவர்னரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். அதற்கு நான் இன்னொரு முறை ஊட்டிக்கு வந்து உங்களுடன் பேசுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். 

ஹெலிகாப்டர் தளத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், காவல்துறை கண்காணிப்பாளர் நிசாமுதீன் உட்பட அதிகாரிகள் அவருக்கு மலர்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: