எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அம்பாலா, அக். 14 - டெல்லியில் கடந்த மாதம் 7 ம் தேதி ஐகோர்ட் முன்பு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தீவிரவாதிகள் நடத்திய அந்த நாசவேலையில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் மீண்டும் நாசவேலை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்திருந்தது. இதனால் டெல்லியில் முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசாருக்கு நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலில் அரியானா மாநிலம் அம்பாலா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு நீல நிற காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளன. பெரிய நாசவேலைக்கு அவை பயன்படுத்தப்படவுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரகசிய தகவலை கேட்டதும் டெல்லி போலீசார் உஷாராகினர். உடனே இது குறித்து அரியானா மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து எச்சரித்தனர்.
இதற்கிடையே வெடிகுண்டு கார் பற்றிய தகவல் அறிந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் அம்பாலா நோக்கி விரைந்தனர். அவர்களும் அரியானா போலீசாரும் ஒருங்கிணைந்து சிறு சிறு குழுக்களாக அம்பாலா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு வெளியில் பார்க்கிங் பகுதியில் உளவுத் துறை தெரிவித்த நீல நிற கார் இருப்பதை கண்டனர். எச். ஆர். 030054 என்ற எண் கொண்ட அந்த கார்தான் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மாலை 6.30 மணி முதல் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஆங்காங்கே நின்று காரை கண்காணித்தனர். காரை நிறுத்தி சென்ற தீவிரவாதிகள் மீண்டும் காரை எடுக்க வரும் போது கைது செய்யலாம் என்று காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவு வரை யாருமே வரவில்லை. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த காரை கைப்பற்றினர். காரை திறந்து பார்த்த போது உள்ளே 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து, 5 டெட்டனேட்டர்கள், குறித்த நேரத்தில் வெடிக்கச் செய்யும் 2 டைமர்கள், 2 பேட்டரிகள் மற்றும் ஒரு காகித பொட்டலத்தில் ரசாயன கலவைகள் ஆகியவை இருந்தன.
அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் அவை தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. காரில் இருந்த வெடி பொருட்கள் மிகப் பெரிய நாசத்தை உண்டாக்க முடியும். அம்பாலா ரயில் நிலையத்தை தகர்க்க அந்த காரில் குண்டுகள் எடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் காரில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் குண்டு வடிவில் மாற்றப்படாமல் இருந்தது. மேலும் டெட்டனேட்டர், டைமர் இணைப்புடன் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. இதன் மூலம் அந்த வெடி பொருட்கள் அம்பாலா ரயில் நிலையத்தை தகர்க்க எடுத்து வரப்படவில்லை எனத் தெரிகிறது.
அந்த காரில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஒரு இனிப்பு கடையில் வாங்கிய பொட்டலம் இருந்தது. மேலும் வெடி பொருட்களை டெல்லிக்கு அனுப்பி வைக்கும் குறிப்புகளும், 2 காஷ்மீர் மாநில நாளிதழ்களும் இருந்தன. இதனால் டெல்லியை தகர்க்கும் நோக்கத்துடன் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்களை தீவிரவாதிகள் அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீபாவளி நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த குண்டை வெடிக்க செய்து பெரிய நாச வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அந்த கார் வந்ததற்கான அடையாளங்கள் தெரியவந்தன. இதையடுத்து அரியானா, பஞ்சாபில் உள்ள டோல்கேட்டுகளில் பொருத்தப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எனவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 6 பேர் அந்த காரில் வந்ததாக அரியானா மாநில போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பஞ்சாப் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து இந்த நாசவேலையில் ஈடுபட முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சரியான நேரத்தில் தகவல் வந்ததால் மிகப் பெரிய நாசவேலை திட்டத்தை முறியடித்துள்ளதாக அரியானா மாநில போலீஸ் டி.ஐ.ஜி. ரஞ்சீவ்தலால் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அம்பாலா நகரில் உள்ள ராணுவ முகாமை தகர்க்க இந்த வெடிபொருட்களை கொண்டு வந்திருக்கலாம். உண்மையை கண்டறிய எல்லா கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்


