முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தியை நோக்கி துப்பாக்கியுடன் வந்தவர் கைது

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

அமேதி,அக்.21 - அமேதி நகருக்கு வந்த ராகுல் காந்தியை நோக்கி துப்பாக்கியுடன் வந்தவர் கைது செய்யப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி நேற்றுமுதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின்போது நேற்று அவரது சொந்த தொகுதியான அமேதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி வந்தார். அப்போது ராகுல் காந்தியை நோக்கி ஒருவர் விரைந்து வந்துள்ளார். ராகுலின் பாதுகாப்பு படையினர் அந்த நபரை தடுத்து நிறுத்தி பரிசோதித்ததில் அவரிடம் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் திவாகர் சோனி என்று தெரியவந்தது. அவர், நிலுவையில் இருக்கும் தனது தந்தையின் கொலை வழக்கு குறித்து ராகுலிடம் தெரிவிக்க வந்துள்ளார். அந்த துப்பாக்கிக்கான உரிமம் அவரிடம் உள்ளது. தாம் ராகுலை தாக்க வரவில்லை என்று சோனி தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றுக்காலையில் அமேதி நகருக்கு வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை ஒரு போராட்டக்குழு தடுத்து நிறுத்தியது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் நேர்மையானவர்களை மட்டும் காங்கிரஸ் சார்பாக நிறுத்துமாறு அவரை அந்தக்குழு கேட்டுக்கொண்டது. இதனால் சற்றும் அதிரச்சி அடையாத ராகுல் காந்தி அங்குள்ள மக்களிடம் சகஜமாக பேசினார். அதன் பிறகு தேர்தலில் சீட்டுக்கேட்டு ராகுலை சுற்றிவளைத்துக்கொண்டது. இந்தாண்டு இறுதிக்குள் இறுதிக்குள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான நாடகங்களை நடத்த அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்