முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் சட்டமன்ற இடைத்தேர்தல் ஜே.எம்.எம். வேட்பாளர்அறிவிப்பு

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

ராஞ்சி, நவ.- 8 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான தனது வேட்பாளரை ஜே.எம்.எம்.கட்சி அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 30 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக தங்களது கட்சியைச் சேர்ந்த ஜெய்ப்பிரகாஷ் பாய்படேல் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா  கட்சியின் முக்கிய தலைவரும், ஜார்க்கண்ட் மாநில துணை முதல்வருமான ஹேமந்த் ஷோரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிபுஷோரன் தலைமையில் அமைந்துள்ள பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாண்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தேக்லால் மகாத்தோ திடீர் மரணமடைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு வருகிற 30 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மறைந்த தேக்லால் மகாத்தோவின் இளைய மகன்தான் ஜெய்ப்பிரகாஷ்பாய் படேல் என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.எம்.எம். கட்சியின் தலைவர் சிபு ஷோரனிடம் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி எப்படி நடக்கிறது என்று கேட்டதற்கு முதல்வர் அர்ஜுன்முண்டா தலைமையில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago