முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளம்பர படமொன்றில் ரஜினி - அமீர்கான்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

மும்பை, நவ.11 - ரஜினிகாந்த், அமீர்கான் இருவரும் இணைந்து ஊட்டச்சத்தின் அவசியத்தை விளக்கும் விளம்பர திரைப்படத்தில் நடிக்கின்றனர். இதை அரசு தயாரிக்கிறது. ஏழைகளும், கிராமங்களில் வசிக்கும் எழுத்தறிவில்லா மக்களும் எளிதில் புரிந்து கொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துள்ள உணவை வழங்க இந்த திரைப்படம் உதவும். அனைத்து திரையரங்குகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் திரையிடப்படும். நாடு முழுவதும் டிஜிடல் பேனர்களும் வைக்கப்படும். ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகள் உயிரிழக்க நேருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் உடன் ஊனம் போன்றவையும் ஏற்படுகிறது. 

இவற்றை தடுக்க சுகாதாரத் துறை முடுக்கிவிடப்பட்டிருந்தாலும் மக்கள் அவற்றை நாடுவதற்கு அவர்களுடைய மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார்கள் பங்களிப்பு அவசியம் என்று அரசு கருதுகிறது. இதை அவ்விரு நட்சத்திரங்களிடமும் தெரிவித்த போது அவர்கள் மனமுவந்து நடிக்க ஒப்புக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony