முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது : அதிகாரி விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

நெல்லை-நவ-14- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் தொழில் நுட்பம் பாதுகாப்பு வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலைகள் இயற்கை சீற்றங்களால் பாதிப்பில்லை என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதல் அணு உலை மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் இறுதி நிலையில்    உள்ளன.அணு உலையின் நிலை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அணு மின் நிலைய அதிகாரிகள் நேரடியாக      விளக்கினார்கள். அப்போது அணு மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது. கூடங்குளம் அணு உலை நான்கு அடுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளை இயக்கவும், குளிர்விக்கவும் தூத்துக்குடி அனல்மின் நிலையம், செண்பகராமன்புதூர், அபிசேகப்பட்டி பவர் கிரிட் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இதற்கு 6 மெகாவட் மின்சாரம் போதுமானது. இயற்கை சீற்றங்கள், அசாதாரன சூழ்நிலைகள் ஏற்படும் போது மின்சாரம் தடைபட்டால் அணு உலைகளை குளிர்விக்க டீசல் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஜெனரேட்டரை 8 நாட்கள் இயக்க தேவையான டீசல் ஜெனரேட்டர்களில் உள்ளது. ஒரு ஜெனரேட்டர் செயல் இழந்தாலும் அடுத்தடுத்து நான்கு ஜெனரேட்டர்களும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் அனைத்தும் செயல் இழந்தாலும்  இயற்க்கையான காற்றின் மூலம் வெப்பத்தை குறைக்கும் திட்டம் (பிஎச்ஆர்எஸ்) உலகிலேயே முதல் முறையாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அணு உலைகளை சுற்றிலும் பெல்ட்    போன்ற வளையம் அமைக்கப்பட்டு 36 துளைகள் இடப்பட்டுள்ளது. இதன் வழியாக காற்று உள்ளே சென்று 12 வெப்பமாற்றிகள் மூலம் அணு உலையை குளிர்விக்கும். அசாதாரன சூழ்நிலைகளில் அணு உலையின் இயக்கம் நின்று விடும். அதில் உள்ள யுரேனியம் உருகி அடியில் உள்ள 'கோர் கேச்சர்' என்னும் பெட்டியில் தங்கி விடும்  எனவே கதிர் வீச்சுக்கான வாய்ப்பில்லை. அணு உலையின் வெளிப்புற கட்டுமானம் 20 டன் எடையை தாங்கும்   அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளதால் நில அதிர்வு, வெள்ளம்,. சுனாமி, விமான தாக்குதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு தெரிவித்தார். 

கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் 

ஒரு அணு உலை ஒரு ஆண்டில் 11 மாதங்கள் மட்டுமே இயக்கப்படும். ஒரு ஆண்டு அணு உலையை இயக்க 75 டன் யுரேனியம் தேவைப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கழிவாகும். ஒரு மாதம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் போது 25 டன் கழிவுகளையும் எடுத்து  அருகிலேயே உள்ள டாங்கியில் சேமிக்க முடியும். 7 ஆண்டுகள் கழிவுகளை அந்த டாங்கியில் சேமிக்கலாம். இந்த கழிவுகளை மறு சுழற்சி செய்து அதிவேக அணு உலைகளில் பயன்படுத்த முடியும். தற்போதைய நிலையை பொறுத்த வரை மறு சுழற்சி நிலையம் தாராப்பூரில் மட்டுமே அமைந்துள்ளது. நாளடைவில் கூடங்குளத்தில் மறு சுழற்சி நிலையம் அமைப்பதற்கான சூழ்நிலை உள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அவசியம் இல்லை

மத்திய நிபுனர் குழுவிடம் போராட்ட குழுவினர் அளித்துள்ள கேள்விகளுக்கு நிபுனர் குழுவினர் பதில் தெரிவிப்பார். அணு மின் நிலைய தொடர்பாக பொது மக்கள், கல்லூரி, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பொது மக்கள் விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைகள் மாறிய பின்னரே முதல் அணு உலையில் உள்ள மாதிரி  எரிபொருளை அகற்றி விட்டு  எரிபொருள் நிரப்ப முடியும். அதன் பின்னரே  மின் உற்பத்தி தொடங்க முடியும். கூடங்குளம் அணு  மின் நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளித்து வருகிறது.அணு மின் நிலையத்திற்கு எந்தவிதமான மிரட்டலும் இல்லை. எனவே மத்திய படைகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு  கோர வேண்டிய அவசியம் இல்லை என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago