ஆந்திர காங். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தெலுங்குதேசம் முடிவு

Image Unavailable

ஐதராபாத், நவ. - 21 - ஆந்திர பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.  இது குறித்து அக்கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தனர். மாநில அரசின் மக்கள் விரோத கொள்கை, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த தீர்மானத்தை கொண்டு வரவுள்ளோம். ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஒருவர் பின் ஒருவராய் காங்கிரசில் இணைந்து வருகிறார்கள். ஜெகன்மோகனே கூட காங்கிரசில் மீண்டும் இணையலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.  இதற்கிடையில் ஆளும் காங்கிரசும், தெலுங்குதேசம் கட்சியும் மேட்ச் பிக்சிங் செய்துள்ளதாக ஒய்.எஸ்.ஆர். கட்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  எனினும் இந்த தீர்மானத்தால் அரசுக்கு ஆபத்து நேராது என்று தெரிகிறது. 83 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கு தேசத்துக்கு டி.ஆர்.எஸ்.சின் ஆதரவு கிடைத்தால் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைத்தால் தீர்மானத்துக்கு ஆதரவாக மேலும் 12 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். 5 உறுப்பினர்களை கொண்ட இடதுசாரிகள் இன்னும் தங்களது நிலையை அறிவிக்கவில்லை. 294 உறப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் 3 உறுப்பினர்களுக்கான இடம் காலியாக உள்ளது. 79 உறுப்பினர்களின் ராஜினாமாவை பேரவை தலைவர் நிலுவையில் வைத்துள்ளார். காங்கிரசில் இணைந்து விட்ட சிரஞ்சீவியின் கட்சியில் 17 உறுப்பினர்கள், முஸ்லீம் கட்சி ஒன்றின் 7 உறுப்பினர்கள் ஆகியோரை சேர்த்து ஆளும் காங்கிரசுக்கு 155 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ