முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினேகனுடன் தொடர்பில்லை: இன்ஜினியர் மனைவி புகார்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.30 - தன்னை தாக்கி குழந்தையை பறித்து சென்ற தனது கணவர் பிரபகாரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது குழந்தையை மீட்டுதர வேண்டும் என்று சினேகனுடன் சென்றுவிட்டதாக கூறப்பட்ட ஜமுனாகலாதேவி நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தனது கணவர் பிரபாகரன் மீது புகார் அளித்தார். இதுபற்றி தனது புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது:- எனக்கும், பிரபாகரனுக்கும் 1.12.04 அன்று திருமணம் நடைப்பெற்றது. எங்களுக்கு எ.பி.சஞ்சனாஸ்ரீ என்று 5 வயது குழந்தை இருக்கிறது.

கடந்த ஒருவருடம் காலமாக நானும், என் கணவரும் பிரிந்து வாழ்கிறோம். எனது கணவரது கொடுமையை தாங்க முடியாமல் கடந்த மார்ச் 10 அன்று விவாகரத்து வேண்டி எனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. இதற்கிடையில் எனது குழந்தையை அவ்வபோது வந்து பார்த்து செல்வார். மேலும் ஒருநாள் அல்லது இரண்டுநாள் அவருடன் இருக்க அனுமதித்துவிட்டு நான் சென்று மீண்டும் அழைத்துவந்து விடுவேன்.

இதற்கிடையில் கடந்த நவம்பர் முதல்வாரத்தில் குழந்தையை அழைத்து சென்றவர், இனிமேல் குழந்தையை உன்னிடம் அனுப்பமாட்டேன் என்று போனில் கூறினார். நான் உடனே கடந்த நவ.10 ஆம் தேதி குழந்தையை மீட்டு தரும்படி தங்களிடம் புகார் செய்திருந்தேன். மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பிவைக்கப்பட்டது. நவ.11 அன்று குழந்தையை நான் கூட்டிசெல்ல போலீசார் கூறினர். அதன்படி நான் என் குழந்தையை கூட்டிவந்துவிட்டேன். 

ஆனால் நவ.18 அன்று அடையாளம் தெரியாத நான்கு நபருடன் வந்த என் கணவர் என்னை தாக்கிவிட்டு குழந்தையை பிடுங்கி சென்றுவிட்டார். மேலும் அன்றே தங்கள் அலுவலகத்தில் பொய்யான ஒரு புகாரையும், கொடுத்து சென்றிருக்கிறார். என்னையும், எனது குழந்தையும் பாடல் ஆசிரியர் சினேகன் கடத்தி வைத்திருப்பதாகவும், அவருடைய கட்டுப்பாட்டில் நான் இருப்பதாகவும், என்னை இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மீடியாக்களிடமும், பேட்டியும் கொடுத்து வருகிறார். நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, சட்டரிதியாக எனது விவாகரத்து நோட்டீசுக்கு பதில் அளிக்காமல், என்னை தாக்கி எனது குழந்தையை பறித்து சென்று, இப்போது வேண்டும் என்றே இந்த பிரச்சனைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத சினேகன் என்பரையும் சேர்த்து பொய் புகார் கொடுத்து என்னை துன்புறுத்தும் எனது கணவர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது குழந்தையை உடனடியாக மீட்டு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நான் நவ.11 அன்று கொடுத்த புகாரின்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எனது கணவர் நவ.18 ஆம் தேதி கொடுத்தபுகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு தக்க வழிகாட்டுதலை வழங்கி எனது குழந்தையை மீட்டு தரும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்