முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.அதிபர் ஜர்தாரிக்கு மாரடைப்பு துபாய் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன்

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,டிச.- 8 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதனையொட்டி அவர் துபாய் கொண்டு செல்லப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது. அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் அதிபராக இருக்கும் ஜர்தாரி மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால் அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி வந்ததாக கூறப்படுகிறது. அதை பாகிஸ்தான் மனித உரிமைத்துறை அமைச்சர் முஸ்தாபா ஹோகர் மறுத்துள்ளார். கடந்த செவ்வாய் அன்று ஜர்தாரிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் துபாய் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடைபெற்றது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இன்று இஸ்லாமாபாத்திற்கு திரும்புகிறார் என்று அமைச்சர் முஸ்தாபா தெரிவித்தார். அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார். அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதற்கும் அமைச்சர் முஸ்தாபா கூறியுள்ளதற்கும் முரண்பாடு உள்ளது. செய்தி தொடர்பாளர் பர்ஹத்ல்லா பாபர் கூறுகையில் ஜர்தாரி மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றிருப்பதாக கூறினார். ஆனால் ஜர்தாரிக்கு ஆபரேஷன் நடந்ததாக அமைச்சர் முஸ்தாபா கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்