முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள தமிழர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்-வைகோ

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச. - 19 - முல்லைப் பெரியாறு அணையை தகர்க்க மாட்டோம் என்று கேரளா அரசு உறுதி தரும் வரை கேரளம் மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கேரளத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கேரளத்தவர்கள் நிறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க தவறினால் நிலைமை விபரீதமாகி விடும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.  முல்லைப் பெரியாறு ஒரு விளக்கம் என்ற தலைப்பில் சென்னையில் விளக்க கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது,  முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசோ நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு பார்க்கலாம் என்றது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டோ கேரள போலீஸ் பாதுகாப்பே போதுமானது என்று உத்தரவிட்டுள்ளது. கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை தகர்க்க நிதி ஒதுக்கி உள்ளது. அணையை தகர்க்கும் முயற்சியில் கேரளத்தவர்கள் முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் அணை பாதுகாப்புக்கு கேரள போலீசாரே போதும் என்பது எவ்வாறு சாத்தியமாகும்.  தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்லும் 13 முக்கிய சாலைகளில் வரும் 21 ம் தேதி பொருளாதார முற்றுகை நடைபெறும். இந்த போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கேரளத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கேரளத்தவர்கள் நிறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க தவறினால் நிலைமை விபரீதமாகி விடும். அணையை தகர்க்க மாட்டோம், அணை கட்டும் எண்ணத்தை கைவிடுவோம் என்று கேரள அரசு உறுதி தரும் வரை கேரளத்தின் மீது நிரந்தர பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றார்.  முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறும் போது, அணையை சேதப்படுத்த முயற்சித்துள்ள கேரள அரசை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு கேரளா மீது தமிழகம் பொருளாதார தடை விதிப்பதே நல்லது. கேரளத்துக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை தடுத்து நிறுத்த வேண்டும். அணை உடைந்து விடும் என்பது போன்ற விஷம செய்திகளை கேரள மக்களிடம் அம்மாநில அரசு முறையாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago