முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவுக்கு மூத்த அமைச்சர்கள் இறுதி வடிவம் கொடுத்தனர்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 20 - லோக்பால் மசோதாவை மத்திய மூத்த அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்து இறுதி வடிவும் கொடுத்தனர். அதன் பின்னர் இறுதி வடிவத்திற்கு நேற்று இரவு மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இன்று மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இந்தியாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஊழல் அதிகரித்து விட்டது. இதை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரபல காந்தீயவாதி அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை தொடக்கினார். அதன் விளைவாக ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வந்து தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. லோக்பால் மசோதாவின் வரம்புக்குள் யாரை யாரை கொண்டு வருவது என்பதில் கருத்து வேறுபாடு இருந்தது. இருந்தபோதிலும் லோக்பால் அறிக்கையை பாராளுமன்ற குழு தயாரித்துவிட்டது. அந்த மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுப்பது குறித்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல், அதிகாரிகள் நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் நேற்றுக்கூடி லோக்பால் மசோதாவின் அறிக்கையை ஆய்வு செய்தனர். மசோதாவின் வரம்பிற்குள் அண்ணா ஹசாரே குழுவினர் கோரியபடி பிரதமர், மத்திய அரசின் கீழ்மட்ட ஊழியர்கள், சி.பி.ஐ.யின் ஒரு பிரிவு ஊழியர்கள் ஆகியோர் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் நீதித்துறை ஊழியர்கள், நீதிபதிகள் ஆகியோர் இந்த மசோதா வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிகிறது. மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைக்கவும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மூத்த அமைச்சர்கள் லோக்பால் மசோதா அறிக்கையை விரிவான முறையில் ஆய்வு செய்து இறுதி வடிவம் கொடுத்தனர். பின்னர் நேற்று மாலையில் மத்திய கேபினட் அமைச்சர்கள் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் கேபினட் அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல், சல்மான் குர்ஷீத், சரத்பவார்,ஏ.கே. அந்தோணி உள்பட பல கேபினட் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதிலும் ஒரு சில திருத்தம் செய்யப்பட்ட பின்னர் லோக்பால் மசோதாவுக்கு அங்கீகாரம் கொடுத்தனர். இதனையொட்டி இன்று பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா மீது விரிவான முறையில் விவாதம் நடக்கும். அதன் பின்னர் மசோதா நிறைவேற்றப்படும். லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவதை பார்க்க அண்ணா ஹசாரேயும் அவரது குழுவினரும் இன்று பாராளுமன்றத்திற்கு வருகிறார்கள். அவர்கள் பார்வையாளர்கள் மண்டபத்தில் இருந்துகொண்டு பாராளுமன்ற நடவடிக்கைகளை கவனிப்பார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago