முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மன்மோகன்சிங்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச. - 25 - பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவு தமிழகம் வருகிறார். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் வரும் நாளை அவர் பங்கேற்கிறார்.  கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜனின் 125 வது பிறந்த தின விழா சென்னை பல்கலைக் கழகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று இரவு வருகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.  இரவு 8.45 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் உட்பட பலரும் வரவேற்பளிக்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா சார்பில் மூத்த அமைச்சர்கள் பிரதமரை வரவேற்க கூடும் என்று தெரிகிறது. விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அவர் செல்வார். அங்கு ராமானுஜன் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த குழுவினரை சந்திப்பது உட்பட இரண்டு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ராமானுஜன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி 45 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது. அதன்பின் சென்னையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் திருச்சி செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு டெல்லியில் இருந்து சுதீப் பிரகாரியா தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் 6 பேர் கடந்த வெள்ளியன்று காலை சென்னை வந்தனர். விமான நிலையம், கிண்டி, ராஜ்பவன் ஆகிய இடங்களில் ஆய்வு செய்த அவர்கள் விழா நடக்கும் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தையும் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆய்வு நீடித்தது. மேலும் சென்னையில் பிரதமரை சந்திப்பவர்களை பற்றிய விபரங்களையும் ஆய்வு செய்ததாக தெரிகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடி செல்கிறார் பிரதமர். காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழகத்தில் கணித மேதை ராமானுஜன் உயர் கணித மையத்துக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை நாளை மாலையில் பிரதமர் திறந்து வைத்து பேசுகிறார். தமிழக கவர்னர் ரோசய்யா, இந்திய திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் இஸ்ரோ தலைவருமான டாக்டர் கஸ்தூரிரங்கன் பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் லேத்பிரகாஷ், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், காரைக்குடி எம்.எல்.ஏ. சோழன் சித பழனிச்சாமி உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொள்கின்றனர். பிரதமர் வருகையால் நகரில் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

பிரதமர், தமிழக கவர்னர் ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் வருவதால் அதற்கான ஹெலிபேட் தளம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மதுரை மாநகர காவல் துறை ஆணையர் கண்ணப்பன், பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். டி.ஐ.ஜி.க்கள் சந்தீப் மித்தல், அமல்ராஜ் ஆகியோரது மேற்பார்வையில் 15 மாவட்ட எஸ்.பிக்கள், 50 டி.எஸ்.பிக்கள், 100 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago