Idhayam Matrimony

வத்தலக்குண்டு பகுதியில் அரசின் திட்டப்பணிகள்- கலெக்டர் நாகராஜன் ஆய்வு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

வத்தலக்குண்டு, - ஜன.2 - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு மாவட்ட கலெக்டர் நாகராஜன் வருகை தந்தார். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், ஒன்றியக்ழக செயலாளருமான இரா.மோகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்பு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கணவாய்ப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஆஸ்ரம காலனியில் உள்ள சுகாதார வளாகத்தில் பார்வையிட்டார். அதன்பின்பு அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து உரிய பணிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மல்லணம்பட்டி ஊராட்சியில் உள்ள லெட்சுமிபுரத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் இந்திரா நினைவு குடியிருப்பு கட்டுமான பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின்பு செங்கட்டாம்பட்டி ஊராட்சியில் ரூ.4.75 லட்சம் மதிப்பில் வரத்து வாய்க்கால் அமைக்கும் பணியினை 100 நாள் வேலை திட்டத்தில் மழையினை பொருட்படுத்தாமல் 200க்கும் மேற்பட்டோர் சிறப்பாக செய்ததை ஆய்வு செய்தார். அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் உடல்நலம் விசாரித்ததுடன் அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாகக் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.

ஆய்வுப்பணியின் போது வத்தலக்குண்டு யூனியன் ஆணையாளர் அருள் சேகரன், கிராம ஊராட்சி ஆணையாளர் செல்வநாயகம், யூனியன் பொறியாளர்கள், கார்த்திக், அரிராமன், யூனியன் ஓவர்சியர் சுமதி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago