முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்ரூவராக மாற ராசா திட்டம் ​- நடிகர் குண்டு கல்யாணம்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், மார்ச்.15 - கருணாநிதி கண்டு கொள்ளாததால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாறிட முன்னாள் மத்திய தி.மு.க. அமைச்சர் ராசா திட்டமிட்டு இருப்பதாக செக்கானூரணியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் தெரிவித்தார். 

மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் செக்கானூரணி கிளைக்கழக சார்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட விவசாய பிரிவு பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். தொகுதிச் செயலாளர் ஆண்டிச்சாமி வரவேற்றார். இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்  நடிகர் குண்டு கல்யாணம், மாவட்ட கழக துணை ச்செயலாளர் ஐய்யப்பன் ஆகியோர் சிறப்புரையாறினர். அப்போது குண்டு கல்யாணம் பேசியதாவது, 

ஜெயலலிதாவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் முன்னேறி நாட்டின் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து பெண் சிசு கொலையை தடுத்து நிறுத்திய ஜெயலலிதாவை அன்னை தெரசா மனமாற பாராட்டினார். அதேபோல் இலவச சைக்கிள், பாடபுத்தகம், உழவர் பாதுகாப்பு, இதயம் காப்போம் போன்ற திட்டங்கள் பொதுமக்களிடையே வெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தான் இன்றும் ஜெயலலிதாவிந் பிறந்த நாள் விழாக்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் கருணாநிதியோ மேடையில் உண்டியல் வைத்து பணம் வசூலிக்கும் நிகழ்ச்சியாக நடத்துகிறார். கொள்ளையடித்து பிழைப்பு நடத்துவதுதான் தி.மு.க. வினருக்கு கைவந்த கலை.

அதனால் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கையெழுத்து போட்டு 1லட்சத்து 76 ஆயிரம் கோடி கொளையடித்துள்ளனர். இந்த வழக்கில் ராசாவை கைது செய்த சி.பி.ஐ. தற்போது கருணாநிதி குடும்பத்தையே சுற்றி வளைத்து வருகிறது. இது உலகமே காரித்துப்பும் ஊழல். 

1 ரூபாய்க்கு அரிசி போடுவதாக கருணாநிதி அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. அது வயிற்றுக்கு போடும் திட்டம் அல்ல. வாய்க்கரிசி திட்டம். இதே போல அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. ஊழல் செய்து வருகிறது. இந்த கொள்ளைகாரர்களை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராசாவை கருணாநிதி கண்டுகொள்ளாததால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாற ராசா திட்டமிட்டுள்ளார். இதனால் கருணாநிதியும் அவரது குடும்பமும் சிறை செல்வது நிச்சயம். மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புரட்சித்தலைவரின் நல்ஆட்சி மையப்போவது உறுதி இவ்வாறு அவர் கூறினார். 

இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் பஞ்சம்மாள், பொருளாளர் அம்பலம் மாவட்ட பாசறை செயலாளர் கபிகாசிமாயன், மாவட்ட இளைஞரணி இணைச்சயலாளர் ராமசுப்பு, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், கொக்குளம் கிளை செயலாளர் பழனி, மாணவரணி ஜெகநாதன், செல்வம், வினோத்குமார், மகாலிங்கம், சிவநேசன், தெய்வராஜ், ராஜாங்கம், ஒந்றிய இளைஞர் பாசறை செயலாளர் முத்துராஜா, செல்வம், காசிமாயன், ஆட்டோ சுரேஷ், ராஜா, அன்பு ராஜ், ஜெயசீலன், ரமேஷ், தெய்வேந்திரன், ஜெயபாண்டி, ஜெயக்குமார், ஜெயபால், அருண்பாண்டி, செந்தில், முருகன், கருப்பையா, பிரபாகரன், ராஜிவ்காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை 3 வீடியோ ஒளிப்பதிவாளர்களைக்கொண்டு முழுமையாக வீடியோ எடுக்கப்பட்டது. 

கூட்டத்தில் பேசிய நடிகர் குண்டு கல்யாணம் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த நீரா ராடியா- கனிமொழி- ராசாத்தி அம்மாள் உரையாடலை மைக்கில் ஒலிபரப்பி அதற்கு தமிழில் விளக்கமளித்தார். இது மக்களிடையே பமரும் வரவேற்பை பெற்றது. 

டேப் ஒலிபரப்பப்பட்ட போது திடீரென மின்சாரம் தடைபட்டது. தி.மு.க. வினரின் சதிச்செயலாக இது இருக்குமோ என்று கருதிய அ.தி.மு.க வினர் உடனடியாக ஜெனரேடேடர்களை இயக்கி கூட்டத்தில் தடை ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!