முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் நம்பியார் மகன் சுகுமார் நம்பியார்மரணம்- ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன - .9 - நடிகர் நம்பியார் மகன் சுகுமார் நம்பியார் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் நம்பியார் இவரது மகன் சுகுமார் நம்பியார் இவருக்கு (64). நேற்று பகல் 12 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவராக திகழந்தவர்.98-99-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இவர் பா.ஜ.க.வில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஐயப்பா சேவா சங்கம் தலைவர் பதவியிலும் பொறுப்பு வகித்தார். மறைந்த சுகுமார் நம்பியார் உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். மேலும் பா.ஜ.க. தலைவர்களும் திரை உலகை சேர்ந்த பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். சுகுமார் நம்பியார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- சுகுமார் நம்பியார் மறைவு செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் பல கலைகளை கற்றவர். காரத்தே கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர். பா.ஜ.க.வில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்தவர். இவரது தந்தை நடிகர் நம்பியாரை போல தேசபக்தி மிக்கவர். ஐயப்பா சேவா சங்கம் தலைவராக பதவி வகித்தவர். சுகுமார் நம்பியார் மறைவு பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய இழப்பு. இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு முதல் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!