முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 12 - 2 ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் டி.விக்கு லஞ்சம்கொடுத்ததாக கூறப்படும் 5 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சொத்துபட்டியலில் டைனமிக் ரியாலிட்டி நிறுவனத்தின் ரூ. 134 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், கானூட் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் ரூ. 22 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், நிகார் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துக்குசொந்தமான ரூ. 10 கோடி சொத்துக்களும், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தினர் ரூ. 52 கோடி சொத்துக்களும், எவர்ஸ்மைல் நிறுவனத்தின் ரூ. 13 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவின் உத்தரவை நிறைவேற்ற வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. கடன் அல்லது பங்கு பத்திரங்கள் மூலம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து பல்வேறு நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஷாகித் உஸ்மான் பல்வாவின் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்திற்கு இந்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது. லஞ்சப் பணத்தை கைமாற்றி விடுவதற்காக பயன்பட்ட நிறுவனங்களுக்கு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் போலியானவை என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்