முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதிப்பு நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.24 - தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று கோட்டையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்த விபரம் வருமாறு:- வங்க கடலில் ஏற்பட்ட தானே புயல் தமிழகத்தை தாக்கியது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் பாதிப்படைந்தன.

இதையடுத்து முதல்வர் அம்மாவட்டங்களில் நிவாரண பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை முடுக்கி விட்டார். அந்த பணிகளை நேரில் சென்று துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் அங்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் பற்றி உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை முழு அளவில் மீட்கும் வகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேண்டிய மறுவாழ்வு பணிகள் குறித்தும், உதவிகள் குறித்தும் முதல்வர் விவாதித்தார். இக்கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், நகராட்சி நிர்ராகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு மற்றும் நீதிமன்றங்கள், சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஊரக தொழில்துறை மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், எரிசக்தி துறை. வருவாய் துறை. நிதித்துறை முதன்மை செயலர்கள், நில நிர்வாக ஆணையர், பொதுப்பணித்துறை செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளம் மற்றும் மீன் வளத்துறை செயலர், வேளாண்மைத்துறை செயலர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், சென்னை நகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!