எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பாராளுமன்றம் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல் முடிவை இணையதளங்கள் மூலமும், மொபைல் ஆப் மூலமும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் வாக்குகள் எண்ணிக்கையோடு, ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுவதால் இந்த முறை தேர்தல் முடிவுகள் வெளி வர காலதாமதமாகும்.
7 கட்டங்களாக...
நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி, கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் போட்டியிட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது.
பணிகள் தீவிரம்...
முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக செய்து வருகிறது.
முதல் சுற்று நிலவரம்...
நாடுமுழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை போடப்பட்டு இருக்கும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து ஓட்டுகளை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகிலும் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களிடம், மின்னணு எந்திரங்களை காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணி நடைபெறும். காலை 9 மணி அளவிலும் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி வாக்கில் எந்த கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பதும் தெரியவந்து விடும்.
சற்று தாமதமாகும்...
வாக்கு எண்ணிக்கையில் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும், நடைபெறும் என்பதாலும், 10 சதவீதம் அளவுக்கு சரி பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என்பதாலும், இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனாலும் இன்று இரவுக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும். தமிழகத்தை பொறுத்த வரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையுடன் 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.
45 மையங்களில்...
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றம் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, தமிழ்நாடு முழுவதும் 45 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 19 கம்பெனிகள் கொண்ட மத்திய போலீஸார் 1,520 பேரும், 62 கம்பெனிகள் கொண்ட தமிழ்நாடு ஆயுதப்படை போலீசார் 4,960 பேரும், தமிழ்நாடு போலீசார் 36 ஆயிரம் பேரும் என 45ஆயிரம் போலீசாரின் பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கை நடைபெறும். இதனிடையே மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்குகளும் எண்ணப்படும்.
30 நிமிடத்தில் வெளியீடு...
ஒவ்வொரு ரவுண்டு ஓட்டு எண்ணிக்கையின் முடிவுகளும் 30 நிமிடத்தில் வெளியிடப்படும். ஓட்டு எண்ணிக்கை அனைத்தும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் மூலம் வீடியோ பதிவு செய்யப்படும். 4,014 வெப் காமிராக்கள் மூலமும் வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கு தேர்தல் கமிஷன் தயார் நிலையில் உள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தையும் கண்காணிக்க 88 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களின் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அவர்களது அனுமதியோடு அந்தந்த தேர்தல்அதிகாரிகள் தேர்தல் முடிவுகளை வெளியிடுவார்கள்.
சிறப்பு ஏற்பாடுகள்...
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதனை நேரடியாக தெரிந்து கொள்வதற்காக தேர்தல் முடிவுகள் மற்றும் அதற்கான டிரண்டுகளை தேர்தல் ஆணையத்தின் http:\\results.eci.gov.in, http:\\elections.tn.gov.in|results2019 ஆகிய இணையதளங்களில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். இவற்றை தவிர தலைமை செயலகத்திலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன் மூலமும் தெரிந்து கொள்வதற்காக voter help line mobile app அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை play store-ல் டவுன்லோடு செய்து அறிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
வார ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
01 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்.
- வைத்தீசுவரன் கோவிலி செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
- சென்னை சிங்காரவேலவர் தெப்பம்
-
இன்றைய ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
01 Feb 2026


