எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரியோடிஜெனீரோ : கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்தது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ரியோடிஜெனீரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை நடந்தது. இறுதிப் போட்டியில் 8 முறை சாம்பியனான பிரேசில் அணி, 2 முறை பட்டத்தை வென்றுள்ள பெருவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பிரேசில் அணி 15-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. கேப்ரியல் ஜீசஸ் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் இவெர்டன் சோர்ஸ் கோலாக்கினார். 44-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெரு அணி வீரர் பாலோ குர்ரிரோ கோல் அடித்தார். பெரு அணி கோல் அடித்த அடுத்த நிமிடத்திலேயே பிரேசில் அணி 2-வது கோலை போட்டது. அந்த அணி வீரர் கேப்ரியல் ஜீசஸ் இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த போட்டி தொடரில் 2 கோல்கள் அடித்த பிரேசில் அணி வீரர் கேப்ரியல் ஜீசஸ் 70-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் 2-வது முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். கண்ணீர் மல்க வெளியேறிய கேப்ரியல் ஜீசஸ் தண்ணீர் பாட்டிலை உதைத்ததுடன், வீடியோ நடுவருக்கு உதவ வைத்து இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரையும் தள்ளி விட்டபடி கோபமாக சென்றார்.
90-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. முடிவில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்த போட்டி தொடரில் முந்தைய ஆட்டங்களில் கோல் எதுவும் வாங்காத பிரேசில் அணி இறுதிப்போட்டியில் மட்டும் ஒரு கோலை விட்டது. லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் அணி கோபா அமெரிக்கா கோப்பையை வெல்வது இது 9-வது முறையாகும். 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசில் அணி இந்த கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக அந்த அணி 2007-ம் ஆண்டில் கோப்பையை வென்று இருந்தது. இந்த போட்டி தொடரில் சிறந்த வீரராக பிரேசில் அணியின் கேப்டன் டானி ஆல்வ்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேறிய போது கோபமாக தண்ணீர் பாட்டிலை உதைத்த சம்பவத்துக்கு கேப்ரியல் ஜீசஸ் போட்டி முடிந்த பிறகு வருத்தம் தெரிவித்தார். அந்த செயலை நான் தவிர்த்து இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
முந்தைய நாளில் நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலியை சாய்த்தது. இதில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எரிச்சல் அடைந்த மெஸ்சி பரிசளிப்பு விழாவின் போது தனக்குரிய வெண்கலப் பதக்கத்தை வாங்க செல்ல மறுத்து விட்டார். அத்துடன் அவர் அளித்த பேட்டியில்,
பிரேசில் அணிக்கு கோப்பையை வழங்க தீர்மானிக்கப்பட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். இறுதிப்போட்டியில் நடுவர்கள், வீடியோ உதவி நடுவர்கள் நியாயமாக எதுவும் செய்யப் போவதில்லை என்று குற்றம்சாட்டினார். பிரேசிலுக்கு ஆதரவாக போட்டி அமைப்பாளர்கள் நடந்து கொள்வதாக மெஸ்சி வெளிப்படையாக பேசிய விஷயம் குறித்து தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. மெஸ்சி மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: ஒரேநாளில் சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்தது
02 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 அதிரடியாக குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ.
-
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது எதனால்? புள்ளி விவரங்களுடன் அமைச்சர் ரகுபதி விளக்கம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க.வுக்கு வாக்குகள் விழாது என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பட்ஜெட் அறிவிப்பில் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைக்காததால் ஏமாற்றம்
02 Feb 2026சென்னை, மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –02-02-2026
02 Feb 2026 -
தமிழ்நாடு முதல்வரின் காருக்கு வழிவிட சிக்னலில் நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்
02 Feb 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காருக்கு வழிவிட சிக்னலில் விஜய் கார் நிறுத்தப்பட்டது.
-
சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றி போர்முரசம் த.வெ.க.: விஜய்
02 Feb 2026சென்னை, சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா: விஜய் பங்கேற்று பேச்சு
02 Feb 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் நேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசிய அதன் தலைவர் விஜய், தீய சக்தியை வீழ்த்த தூய சக்தியான தமிழக வெற்றிக்கழகத
-
தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா சார்பில் கடும் ஆட்சேபனை
02 Feb 2026பெய்ஜிங், தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.
-
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது: தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது என்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க.
-
திருச்சியில் பிப். 21-ல் நா.த.க. மாநாடு: 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
02 Feb 2026சென்னை, நாம் தமிழர் கட்சியின் மாநாடு வருகிற 21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று சீமான் அறிவித்திருந்தார்.
-
திடீரென மூச்சுத் திணறல்: நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
02 Feb 2026சென்னை, நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை கலெக்டர்
02 Feb 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் மதுரை மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
-
சிகிச்சை அரங்கு கட்டிடம் கட்ட மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
02 Feb 2026சென்னை, மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்துக்கு ரூ.10 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.2 கோடி என மொத்தம் ரூ.12 கோடி நிதி உடனடியாக அறிவிக்க
-
பாக். ராணுவம்-தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்: 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை
02 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்ப
-
அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அவகாசம்
02 Feb 2026சென்னை, பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆண
-
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தனபால் கோரிக்கை
02 Feb 2026புதுடெல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.
-
பழனி முருகனுக்கு காவடி எடுத்த அண்ணாமலை
02 Feb 2026பழனி, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார்.
-
மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்
02 Feb 2026சென்னை, மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் வழங்க ரூ.
-
ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
02 Feb 2026டாக்கா, இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டன
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
02 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் தெப்பம், ரிசப வாகனம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
02 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
02 Feb 2026


