முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தான் வேலை பார்த்த டெல்லி பல்கலை கழகத்தில் மாணவராக சேரும் செக்யூரிட்டி

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், இப்போது அதே பல்கலைக் கழகத்தில் மாணவராக சேர உள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தின் பஜேரா கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஜல் மீனா. பள்ளிப்படிப்பை தனது கிராமத்திலேயே முடித்தார். அதன் பிறகு படிக்க வசதி இல்லாததாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும் படிக்க முடியவில்லை. ராம்ஜல் கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் செக்யூரிட்டி பணியில் சேர்ந்தார். செக்யூரிட்டி பணியில் சேர்ந்த பிறகும், தனக்கு இருந்த படிப்பின் மீதான ஆர்வத்தினை ராம்ஜலால் விட முடியவில்லை. இதனால் பல்கலையின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் உதவியோடு பணி நேரம் போக மீதி நேரத்தில் நேரு பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுக்கு தயாரானார் ராம்ஜல் இந்த நுழைவுத் தேர்வில் ராம்ஜல் தற்போது தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதனையடுத்து ராம்ஜல் அப்பல்கலைக் கழகத்தில் பி.ஏ ரஷ்ய பாடப்பிரிவு தேர்வு செய்து மாணவராக உள்ளே நுழைய உள்ளார். இந்நிலையில் ராம்ஜலுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவர் மட்டுமே சம்பாதித்து வருவதால் குடும்பத்தைப் பார்க்க வேறு யாரும் இல்லை. காலையில் மாணவராக பாடங்களை கற்றுக் கொண்டும், இரவில் வேலைப் பார்ப்பதற்கும் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் அவர் அனுமதிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து