முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 நாட்களில் 8 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்க மோடி அரசு திட்டம்

புதன்கிழமை, 17 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி இல்லத்தரசிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப பெண் உறுப்பினர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க மோடி அரசு திட்டமிட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் அடுத்த பெரிய இலக்கு நிர்ணயித்து உள்ளது அடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி இல்லத்தரசிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப பெண் உறுப்பினர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. மே 2016-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2019 பொதுத்தேர்தலில் மோடி தலைமையிலான அரசாங்கம் அமைப்பதற்கு இது பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா என்ற இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் 2016-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு எரிவாயு இணைப்புக்கும் வைப்புத் தொகை உள்ளிட்டவற்றுக்கு ரூ.1600 மத்திய அரசு மானியமாக சம்பந்தப்பட்ட எரிவாயு விநியோகஸ்தருக்கு வழங்கி விடும். மேலும், எரிவாயு அடுப்பு, முதல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றுக்கு உத்தேசமாக ரூ.1600 சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரே பயனாளிக்கு கடன் வசதியில் வழங்க வேண்டும். இந்தக் கடனை மறுமுறை எரிவாயு சிலிண்டர் வழங்கும் போது அளிக்கப்படும் மானியத் தொகையில் கழித்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இன்னும் அதிகமானோருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 7.2 கோடி பேர் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் பெற்று பயனடைந்துள்ளனர். இதுதவிர, வரும் மாதங்களில், ஒன்று முதல் இரண்டு கோடி எல்.பி.ஜி. இணைப்புகள் வழங்கப்படும். அதே நேரத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 100 சதவீத ஏழை பெண்கள் எரிவாயு இணைப்புகள் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து