எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து நிலைகளிலும் தயார்நிலையில் இருக்குமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
2019 -ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. 2019 - ம் ஆண்டு தென் மேற்கு பருவ மழைக் காலத்தில் 21.09.2019 முடிய 5 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், 14 மாவட்டங்களில் அதிகப்படியான மழைப் பொழிவும், எஞ்சிய 13 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.
மண்டல குழுக்கள்
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,399 பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 662 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9,162 பெண்கள் அடங்கிய 30,759 எண்ணிக்கையிலான முதல் நிலை மீட்பாளர்களும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடுவதற்கும், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 3,824 முதல் நிலை மீட்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக, 13,318 தடுப்பணைகள் கட்டப்பட்டு, 14,627 கால்வாய் நீர் வழிப்பாதைகள் மற்றும் 3,174 கிலோ மீட்டர் நீளம் ஆற்றுப்படுகைகள் தூர்வாரப்பட்டன. 3,662 ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 6,320 பாலங்கள் மற்றும் 1,01,582 சிறுபாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 7.44 கோடி கன மீட்டர் அளவுக்கு தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணை 6.60 லட்சம் விவசாயிகள் நிலத்திற்கு உபயோகித்து பயனடைந்துள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களைத் தவிர 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 இயந்திரங்கள், 2,115 ஜெனேரட்டர்கள் மற்றும் 483 ராட்சத பம்புகள் தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களாக தயார் நிலையில் உள்ளன என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தயார் நிலையில் காவலர்கள்
நடமாடும் முதல் நிலை மீட்பாளர் குழு ஒவ்வொரு பகுதி, வட்டம், மண்டல வாரியாக அமைக்கப்பட்டு, அக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் (சென்னை நீங்கலாக) அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்களும் ஆக மொத்தம் 6,606 பயிற்சி பெற்ற காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,537 தீயணைப்பு வீரர்களுக்கும், 1,400 காக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 நபர்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் உத்தரவு
மாநில மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம், செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னனு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கீழ்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் மற்ற பொருட்கள், மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை 2019 ஆண்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையின் கீழ் உடனடியாக மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் முப்படையினைச் சேர்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சியிலும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சரிபார்ப்பு பட்டியலின் அடிப்படையில் வரும் அக்டோபர் திங்கள் முதல் வாரத்திலிருந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் குறைக்க அனைத்து துறையினைச் சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்துவதற்காக கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்குவதற்காக ரூ.30.27 கோடியும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உபகரணங்களுக்காக ரூ.7.25 கோடியும், மீன்வளத் துறைக்கு உபகரணங்களுக்காக ரூ.1.00 கோடியும் ஆக மொத்தம் ரூ.38.52 கோடி உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்குவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தற்போது பிரதமர் பதவியோ, பீகார் முதல்வர் பதவியோ காலியாக இல்லை : பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு
29 Oct 2025பாட்னா : பீகார் முதல்வர் பதவியும், பிரதமர் பதவியும் தற்போது காலியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
29 Oct 2025சென்னை : டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழைக்கு 2 வாரம் ஓய்வு: தமிழகத்தில் வரும் 10-ம் தேதிக்கு பிறகு சூறாவளி ஆட்டம் துவக்கம்
29 Oct 2025சென்னை : தமிழகத்தில் வருகிற 10-ம் தேதிக்கு பிறகு சூறாவளி காற்று ஆரம்பமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.


