முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் - நாங்குநேரியில் முதல்வர் பழனிசாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

நெல்லை  : தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் வரும் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று நாங்குநேரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ. 200 கோடி முதலீட்டில் பச்சையாறு கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். பச்சையாறு திட்டத்தின் மூலம் 46 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். 5 லட்சம் பேருக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும். தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதால் மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. விரைவில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஆளும் கட்சி வேட்பாளர் வென்றால் மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். நல்லது செய்வதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியிடுகிறார். எனவே அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு வாக்களித்து அவரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து