முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர மாநிலத்தில் வாக்களித்த தமிழக கவர்னர் பன்வாரிலால் - நடிகர் அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்களும் வாக்களிப்பு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

நாக்பூர்  : மகராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தன் குடும்பத்துடன் வந்து வாக்கை பதிவு செய்தார் .

மகராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.  சில இடங்களில், கொட்டும் மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்தனர்.  இதே போன்று 90 தொகுதிகளை கொண்டுள்ள அரியானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.  பிரபல பாலிவுட் நடிகரும், சமூக ஆர்வலருமான அமீர்கான், மும்பையில் மேற்கு பந்தராவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, தனது மனைவியும், நடிகையுமான லாரா தத்தாவுடன் வந்து, மும்பையின் மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மகராஷ்டிராவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, அவரது மனைவி காஞ்சன் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

அரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில், புதிய வரவாக வந்திருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் செளதாலா மற்றும் அவரது குடும்பத்தினர், டிராக்டரில் மூலம் வந்து சிர்சாவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில் வாக்களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து