முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜினாமாவைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்கிறேன் - இம்ரான்கான் சொல்கிறார்

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : ராஜினாமாவைத் தவிர எதிர்க்கட்சிகளின் பிற கோரிக்கைகளை ஏற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இம்ரான்கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடந்த வாரம் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக ஆசாதி மார்ச் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கின. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் எதிர்க் கட்சிகளின் ராஜினாமா கோரிக்கையைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களுடான இம்ரான் கானின் இந்தச் சந்திப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் பர்வேஸ் கட்டாக் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் பல முக்கியமான கோரிக்கைகளை அரசு எற்றுக் கொண்டது. ராஜினாமா கோரிக்கையைத் தவிர, மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து இரு தரப்புத் தலைவர்களும் கலந்தாலோசித்து வருகிறார்கள். பேச்சுவார்த்தை தொடரும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளில் இம்ரான் கானின் ராஜினாமா மற்றும் மறு தேர்தலை முக்கியக் கோரிக்கையாக முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து