முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து பூங்காவில் காரின் மீது அமர முயன்ற யானை: வைரலாகும் வீடியோ

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாங்காக் : தாய்லாந்து நாட்டின் தேசிய பூங்கா ஒன்றில் காரின் மீது யானை அமர முயன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தாய்லாந்து நாட்டில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது.  இங்குள்ள தானாரத் சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.  இந்நிலையில், பூங்காவில் இருந்த டியூவா என்ற ஆண் யானை (வயது 35) காரை வழிமறித்துள்ளது. இதன்பின் காரின் மீது யானை ஏற முயன்றுள்ளது.  அங்கிருந்து தப்பி செல்ல காரின் ஓட்டுனர் முயற்சிக்கும் போது குறுக்கே சென்ற யானை தனது உடலை காரின் மீது வைத்து அமருவதற்கு முயன்றது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  காரின் பின்புற ஜன்னல், மேற்கூரை மற்றும் நடுப்பகுதி ஆகியவை சேதமடைந்தன. இதுபற்றி பூங்கா இயக்குனர் சரீன் பவான் கூறும் போது, ஈரப்பதம் மற்றும் குளிர்கால சூழலில் சுற்றுலாவாசிகளை வரவேற்கவே டியூவா வெளியே வந்துள்ளது.  அந்த நடுத்தர வயதுடைய யானை யாரையும் அல்லது எந்த வாகனங்களையும் துன்புறுத்துவது கிடையாது என கூறினார். இந்த சம்பவத்திற்கு பின்னர், இது போன்று மீண்டும் நடக்காமல் இருப்பதற்காக சுற்றுலாவாசிகள் தங்களது கார்களை யானைகளிடம் இருந்து 30 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விடுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து