எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அம்மாவின் அரசு மீது ஸ்டாலின் மட்டும் குறைகூறுகிறார் என்று சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுகின்ற பொழுது மேட்டூரிலிருந்து கரூர், மாயனூர் கதவணை வரை ஆற்றின் இரு கரைப் பகுதிகளிலும் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரேற்று மூலமாக அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும். இதுவே அம்மாவின் அரசின் லட்சியம், இதை நிறைவேற்றியே தீருவோம். இந்த திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம் அம்மாவினுடைய கனவுத் திட்டம். அம்மா மறைந்தாலும் அம்மாவின் அரசு அதை தொடர்ந்து செயல்படுத்தும். அந்த வகையில், கரூரிலிருந்து குண்டாறு வரை அந்தத் திட்டத்தை இணைக்கவிருக்கின்றோம். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை எங்களின் அரசு நிறைவேற்றியே தீரும். அடுத்த ஜூலை மாதத்திற்குள் அதற்கு அடிக்கல் நாட்டப்படும். எங்களுடைய அரசு, அம்மாவின் கனவுத் திட்டமாக காவிரி -குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பியிருக்கின்றோம். இத்திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து காவிரியிலிருந்து குண்டாறு வரையிலான இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம். இத்திட்டம் பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்படும். கரூர், மாயனூர் கதவணையிலிருந்து குண்டாறு வரை இணைக்கின்றபொழுது, உபரிநீர் கால்வாய் வழியாக செல்வதால் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் செழிக்கும். வைகை அணை நிரப்பப்பட்டு இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் செழிக்கும். சேலம் மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்டங்கள் முழுவதும் செழிக்க எங்களின் அரசு நடவடிக்கை எடுத்து, இத்திட்டத்தினை நிறைவேற்றியே தீரும். எங்கள் திட்டங்களெல்லாம் எதிர்காலத்திலும் விவசாயிகள் பயனடைகின்ற திட்டங்களாக இருக்கின்றது. எதிர்காலத் தமிழகம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும், வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீர், குடிநீருக்குத் தேவையான நீர் முழுவதுமாக வழங்க வேண்டும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எங்களுடைய லட்சியம்.
முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் வாயிலாக சேலம் மாவட்டத்தில் 56,267 மனுக்கள் பெறப்பட்டதில் 26,712 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 27,010 மனுக்கள் பல்வேறு நிலைகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மனுக்களையும் மறு ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 2545 மனுக்கள் அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது, அதற்கும் தீர்வு காணப்படும். சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் 12,989 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை ஒரே நேரத்தில் வழங்குகிற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. மக்கள் வைக்கின்ற கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொண்டு இருக்கின்ற அரசு அம்மாவின் அரசு. இப்படி எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பொழுது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, இந்த ஆட்சி நடக்கின்றதா? இல்லையா? என்று கேள்வி கேட்கிறார். இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது எதனால்? புள்ளி விவரங்களுடன் அமைச்சர் ரகுபதி விளக்கம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க.வுக்கு வாக்குகள் விழாது என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: ஒரேநாளில் சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்தது
02 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 அதிரடியாக குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ.
-
பட்ஜெட் அறிவிப்பில் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைக்காததால் ஏமாற்றம்
02 Feb 2026சென்னை, மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –02-02-2026
02 Feb 2026 -
தமிழ்நாடு முதல்வரின் காருக்கு வழிவிட சிக்னலில் நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்
02 Feb 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காருக்கு வழிவிட சிக்னலில் விஜய் கார் நிறுத்தப்பட்டது.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா: விஜய் பங்கேற்று பேச்சு
02 Feb 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் நேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசிய அதன் தலைவர் விஜய், தீய சக்தியை வீழ்த்த தூய சக்தியான தமிழக வெற்றிக்கழகத
-
சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றி போர்முரசம் த.வெ.க.: விஜய்
02 Feb 2026சென்னை, சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது: தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது என்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க.
-
தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா சார்பில் கடும் ஆட்சேபனை
02 Feb 2026பெய்ஜிங், தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.
-
திருச்சியில் பிப். 21-ல் நா.த.க. மாநாடு: 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
02 Feb 2026சென்னை, நாம் தமிழர் கட்சியின் மாநாடு வருகிற 21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று சீமான் அறிவித்திருந்தார்.
-
திடீரென மூச்சுத் திணறல்: நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
02 Feb 2026சென்னை, நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பாக். ராணுவம்-தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்: 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை
02 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்ப
-
திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை கலெக்டர்
02 Feb 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் மதுரை மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
-
சிகிச்சை அரங்கு கட்டிடம் கட்ட மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
02 Feb 2026சென்னை, மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்துக்கு ரூ.10 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.2 கோடி என மொத்தம் ரூ.12 கோடி நிதி உடனடியாக அறிவிக்க
-
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தனபால் கோரிக்கை
02 Feb 2026புதுடெல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.
-
மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்
02 Feb 2026சென்னை, மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் வழங்க ரூ.
-
அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அவகாசம்
02 Feb 2026சென்னை, பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆண
-
பழனி முருகனுக்கு காவடி எடுத்த அண்ணாமலை
02 Feb 2026பழனி, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார்.
-
ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
02 Feb 2026டாக்கா, இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டன
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
02 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் தெப்பம், ரிசப வாகனம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
02 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
02 Feb 2026


