முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.சி.பி. அணியில் அசத்துவாரா 19 வயது இளைஞர் தேவ்தத்

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர் : கர்நாடகா அணிக்காக விளையாடி வரும் 19 வயதே ஆன இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் ஆர்சிபி-யில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா அணிக்காக விளையாடி வருபவர் இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல். 19 வயதே ஆன இவர் கடந்த ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதே போல் ஆர்.சி.பி. அணியும் அவரை ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், 2019 சீசனில் ஒரு போட்டியில் கூட களம் இறக்கவில்லை. இந்நிலையில்தான் விஜய் ஹசாரே டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 11 போட்டிகளில் விளையாடி 609 ரன்கள் குவித்தார். சராசரி 67.66. ஸ்டிரைக் ரேட் 80.09 ஆகும். அவரது ஸ்கோரில் ஐந்து அரைசதம், இரண்டு சதங்கள் அடங்கும்.அதேபோல் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 11 ஆட்டங்களில் 548 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 68.50. ஸ்டிரைக் ரேட் 178.50. இவரது ஸ்கோரில் ஐந்து அரைசதம், ஒரு சதம் அடங்கும்.இவரது ஆட்டத்தை பார்த்த இந்திய அணி கேப்டனும், ஆர்.சி.பி. கேப்டனுமான விராட் கோலி அணியில் உள்ள பயிற்சியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் 12 வீரர்களை வெளியேற்றிய நிலையில், தேவ்தத்தை தக்கவைத்துள்ளது. 2020 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆடும் லெவன் அணியில் தேவ்தத்திற்கு உறுதியாக இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து