Idhayam Matrimony

மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

தன் மூளையிலிருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது ஒரு பெண் வயலின் வாசித்த நெகிழ்ச்சியான சம்பவம் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.

ஆப்ரேஷன் அறையில் டாக்மர் டர்னர் (53), வயலினை இசைக்க, மருத்துவர்கள் அவரது மூளையிலிருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். டங்மர் டர்னர் அறுவை சிகிச்சையின் போது தனது வயலின் வாசிக்கும் திறனை இழந்து விடாமல் இருக்க, மருத்துவர்கள் இந்த யோசனையை அவருக்கு வழங்கினர். இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது, டங்மருக்கு இந்த வயலின் எவ்வளவு முக்கியமானது என்று எங்களுக்கு நன்கு தெரியும். எனவே, அவரது மூளை நுட்பமான பகுதிகளில் செயல்படுவதை நாங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, அவரை வயலின் வாசிக்க அனுமதித்தோம் என்றார். டர்னர் கூறும்போது, வயலின் எனது கனவு. நான் எனது 10 வயதிலிருந்து வயலினை வாசித்து கொண்டிருக்கிறேன். நான் வயலின் வாசிக்கும் திறனை இழப்பது என்பது மனமுடையும் செய்தி என்பதால் மருத்துவர்கள் எனது கவலையை உணர்ந்து கொண்டார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து