முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமாற்றிய காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயத்தை அனுப்பி வைத்த காதலி

புதன்கிழமை, 20 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனுக்கு தன்னைப் போலவே அழுகை வர வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண். 

சீனா  ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்த போது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.

இந்த நிலையில், காதலர் இந்த பிரிவுக்கு  வேதனைப்படவில்லை என்பது தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. உடனே 1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை  தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார் அவர். அந்த கடிதத்தில், நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை என்று எழுதப்பட்டிருந்தது. ஜாவோவின் காதலர் வெங்காயத்தை  பார்த்து திகைத்துப் போய் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அத்துடன் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், 1000 கிலோ வெங்காயத்தை ஜாவோவின் முன்னாள் காதலன் வீட்டுக்கு டிரக் ஒன்று டெலிவரி செய்வதையும் காண முடிகிறது. ஜாவோவின் முன்னாள் காதலன் தனது முன்னாள் காதலியை வித்தியாசமானவ்ர் என்று கூறினாலும், நான் அழாததற்காக நான் ஒரு மோசமான மனிதனா? என கேள்வி எழுப்பி உள்ளார். காதலரின் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில்  வெங்காய துர்நாற்றம் வீசுவதாகக் கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து