முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

திங்கட்கிழமை, 25 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது. இதற்கு தலைநகர் சென்னையை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நல்ல பலன் கிடைத்து வருகிறது. ஆனால் எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கட்டுப்பாடுகள் விதித்த போதிலும் சென்னையில் மட்டும் கொரோனா அடங்க மறுக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118- ஆக உயர்ந்துள்ளது. மேற்கண்ட தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து