முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூல் மசூதிக்குள் வெடிகுண்டு தாக்குதல் - 2 பேர் பலி

புதன்கிழமை, 3 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : காபூலில் உள்ள மசூதிக்குள் நடந்த தற்கொலைபடை  வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பசுமை மண்டலத்தில் ஒரு பிரபலமான மசூதிக்குள் நடத்தப்பட்ட தற்கொலைபடை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியதாவது:-

செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (1500 ஜி.எம்.டி.) இரவு 7:25 மணியளவில் வஜீர் அக்பர் கான் மசூதியை குறிவைத்து குண்டு வெடித்தது.இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் மசூதியின் பிரார்த்தனைத் தலைவர் முல்லா முகமது அயாஸ் நியாஸி ஒருவர் ஆவார். தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்தார்.

மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறி உள்ளார்.இந்த மசூதி பல சர்வதேச அமைப்புகள் மற்றும் தூதரகங்களின் அலுவலகங்களுக்கு அருகில் ஒரு உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து