முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இந்திய பாதுகாப்புத்துறைக்கான பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு சுயசார்பு - இந்தியா திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

இதனடிப்படையில் வெளிநாட்டில் இருந்து பாதுக்காப்புத் துறைக்கு இறக்குமதி செய்யும் 101 பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பாதுகாப்பு துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக பொருட்கள் இறக்குமதிக்கு  தடை விதிக்கப்படுகிறது.  பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அமைப்புடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேவையான அளவு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் மட்டும் தடைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  பாதுகாப்பு உபகரணம் தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து தரும் அமைப்புகளுக்கு புது வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியும். பீரங்கி துப்பாக்கிகள், துப்பாக்கிகள், போக்குவரத்து விமானம், ரேடார் உள்ளிட்டவற்றுக்கு தடைவிதிக்கப்படுகிறது. 

பாதுகாப்பு துறைக்கு தேவையான முக்கிய பொருட்களை இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை 2020 முதல் 2024-ம் ஆண்டிற்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்ய வேண்டிய மேலும் சில ராணுவ தளவாடங்கள் எதிர்காலத்தில் கண்டறியப்படும். உள்ளூர் நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கும் போது சுமார் ரூ. 4 லட்சம் கோடிக்கு பொருட்களை பெற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து