முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக்குறைவால் மரணமடைந்த காங். முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா உடல் இன்று தகனம்

ஞாயிற்றுக்கிழமை, 27 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற யசோதா, உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. 

சென்னை கோடம்பாக்கம் வெள்ளாள தெருவில் வசித்து வந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா. 75 வயதான இவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்துள்ளார்.  1980. 1984, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்த யசோதா எம்.எல்.ஏ. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட யசோதா திடீரென மயங்கி விழுந்தார். மாரடைப்பு காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.   இதையடுத்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் கடந்த 23-ம் தேதியில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் யசோதா நேற்று காலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். 

காமராஜர் காலத்தில் இருந்தே காங்கிரசில் இணைந்து பணியாற்றிய யசோதா முழுநேரமும் அரசியல் பணியையே மேற்கொண்டு வந்தார். காங்கிரஸ் அறக்கட்டளை டிரஸ்டியாக முக்கிய பொறுப்பையும் அவர் வகித்துள்ளார். யசோதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக காங்கிரஸ் முகநூலில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.  யசோதாவின் உடல் இன்று மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து