முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தரகரை அணுக வேண்டாம்: பக்தர்களுக்கு திருப்பதி கோவில் தேவஸ்தானம் வேண்டுகோள்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      ஆன்மிகம்
Tirupati 2023-09-30

Source: provided

திரு​மலை : இடைத்தரகரை அணுக வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த விஸ்​வ​நாத் குடும்​பத்​தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தரு​வ​தாக கூறி, நடராஜ் நரேந்​திர குமார் மற்​றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ.90 ஆயிரம் பெற்​றுள்ளனர். அதன் பிறகு பணத்தை கேட்​கும்​போதெல்​லாம் ஏதாவது காரணத்தை கூறி ஏமாற்றி உள்​ளனர்.

இதுதொடர்​பாக விஸ்​வ​நாத் குடும்​பத்​தினர் திரு​மலை விஜிலென்ஸ் அதி​காரிகளிடம் புகார் அளித்​தனர். விசா​ரணை​யில், பணத்தை பெற்ற இரு​வரும் திருப்​பதி தேவஸ்​தான ஊழியர்​கள் இல்லை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இரு​வரும் 15-க்​கும் மேற்​பட்ட பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்​திருப்​பதும் தெரிய​வந்​தது.

இதனை தொடர்ந்து இரு​வர் மீதும் காவல் நிலை​யத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. பக்​தர்​கள் யாரும் போலி தேவஸ்​தான இணை​யதளத்​தில் முன்​ப​திவு செய்ய வேண்​டாம். தரிசனத்​துக்கோ அல்​லது தங்​கும் அறை​களுக்கோ இடைத்​தரகர்​களை நம்பி ஏமாற வேண்​டாம். இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து