முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      ஆன்மிகம்
Thirrupathi 2025-08-17

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

நேற்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.பக்தர்கள் ஷீலா தோரணம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அதிக அளவில் வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் மலை அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலிபிரி முதல் கருடன் சிலை வரை வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. அதனை போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.திருப்பதியில் நேற்று முன்தினம் 87,759 பேர் தரிசனம் செய்தனர். 42,043பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து