முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அனைத்து வயதினரும் செல்லலாம்

புதன்கிழமை, 17 பெப்ரவரி 2021      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம் என்று கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து வயது (சிறுவர்கள், முதியவர்கள் உட்பட) பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

தரிசனத்துக்கு அம்மன் சன்னதி கிழக்குக் கோபுரம், தெற்குக் கோபுரம், மேற்குக் கோபுரம், மற்றும் வடக்குக் கோபுரம் வழியாக இனி அனுமதிக்கப்படுவர். கோவிலுக்குள் மொபைல் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பூ, மாலை கொண்டு வரலாம்.

கோவிலுக்குள் அம்மன் சன்னதி கிழக்கு வாயிலுக்குள் நுழைந்து அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம், பொற்றாமரைக்குள கிழக்குப் பகுதி, தெற்குப் பகுதி, கிளிக்கூடு மண்டபம், கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு பின் சுவாமி சன்னதிக்குச் சென்று தரிசனம் செய்து சனீஸ்வரர் சன்னதி, அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் பத்திரகாளி அருகில் உள்ள வழியில் வெளியே வந்து பழைய திருக்கல்யாண மண்டபம் வழியாக கிழக்கு வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

கோயிலில் எங்கும் உட்கார அனுமதி கிடையாது. உடல் வெப்ப பரிசோதனை கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து