முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 5 பகுதிகள் கொண்ட 133.87 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டம், 12 ஆயிரத்து 301 ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- 

உலக வங்கியுடன் விரிவான கலந்துரையாடலுக்குப்பின் மாநகரக் கூட்டாண்மை ஒரு தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், உலக வங்கியுடன் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும். இத்திட்டம் மூன்று கட்டங்களாக ஏழாண்டு காலத்தில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 3,140 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

இதில் உலக வங்கியின் நிதியுதவியாக 300 மில்லியன் அமெரிக்க டாலர் அடங்கும். 2020-21-ம் ஆண்டில் 3,167.28 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கும், 3,220.60கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளின் ஓடுதளப்பாதை தரத்தினை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும், 706 பாலங்கள் மற்றும் சிறுபாலங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கும் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் 5 ஆயிரத்து 171 ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 6 ஆயிரத்து 448 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  5 பகுதிகள் கொண்ட 133.87 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டம், 12 ஆயிரத்து 301 ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து