முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசோலை மோசடி வழக்கில் சிக்கிய சரத்குமார் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத்குமாருக்கு தலா ஓராண்டும், 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராதிகாவுக்கு தலா ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரம் மேல்முறையீடு செய்வதற்காக, சரத்குமாரின் சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது. 

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.1.5 கோடியை காசோலை மூலமாகவும், ரூ.50 லட்சத்தை ரொக்கமாகவும் கடனாக பெற்றுள்ளனர். இதற்காக சரத்குமார் தரப்பில் 7 காசோலைகள் வழங்கப்பட்டன. இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். 2 வழக்குகளில் ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர். தாங்கள் மோசடி செய்ய நினைக்கவில்லை. வட்டி அதிகமாக கேட்டதால் பணத்தை உடனே திரும்ப செலுத்த முடியவில்லை என்று சரத் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 7 வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஒரு வருடமும், ராதிகா மற்றும் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு வருடமும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இந்நிலையில் மேல்முறையீடு செய்யும்வரை, தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூவர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சரத்குமார், ஸ்டீபன் ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதித்ததால், விசாரணைக்கு ஆஜராகவில்லை என ராதிகா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து