முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவு நேர ஊரடங்கின்போது சென்னையில் 200 இடங்களில் சோதனை - போலீஸ் கமி‌ஷனர்

திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறையினருடன் இணைந்து கொரோனா விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகம் உள்ள இடங்களில் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருநாளில் மட்டும் 128 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்களை போலீசார் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

முககவசம் அணியாமல் கொரோனா விதி மீறலில் ஈடுபட்டதாக கடந்த 10 நாட்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 662 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  34 ஆயிரம் வழக்குகளும், 17-ந்தேதி 34 ஆயிரத்து 224 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் தனி மனித இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 13,484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 867 வழக்குகளும், நேற்று 17-ந்தேதி 720 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனா விதிமீறல் தொடர்பான கண்காணிப்பில் போலீசார் முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் கண்காணிப்பில் ஈடுபடும் போலீசாரை கண்டதும் கொரோனா விதி மீறலில் ஈடுபடுபவர்கள் தெருக்களில் புகுந்து பலர் தப்பி வருகின்றனர். இதே போல் தெருக்களிலும் சமூக இடைவெளி, முககவசம் இன்றி கட்டுப்பாடுகளை மீறி வருகின்றனர்.

இதையடுத்து முக்கிய சாலைகளில் மட்டுமின்றி தெருக்கள் தோறும் கண்காணிப்பை அதிகப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் ரோந்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தெருக்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தி முககவசம் அணிவதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு வலியுறுத்துவதோடு விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

வரும் நாட்களில் கொரோனா விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பெரம்பூர், செம்பியம் போலீஸ் குடியிருப்பில் காவலர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனை போலீஸ் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு விதிகளை பொது மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்.

புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாநகராட்சி, சுகாதாரத் துறையின் ஆலோசனைப்படி போலீசார் செயல்படுவார்கள்.

நடிகர் மன்சூர் அலிகான் மீதான புகாரை சட்ட நிபுணர்களுக்கு அனுப்பி ஆலோசித்து வருகிறோம். ஆலோசனைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாமல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து