முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்பதிவு செய்த பஸ் பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் - அதிகாரி தகவல்

திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவுநேர பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே நீண்டதூரம் செல்லும் அரசு விரைவு பஸ்கள் காலையிலேயே இயக்கப்பட உள்ளன. இரவு 10 மணிக்குள் அந்தந்த இடத்தை அடையும் வகையில் அரசு பஸ்கள் புறப்பட்டு செல்லும். மேலும் இரவுநேர பஸ்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோ கூறியதாவது:-

இரவுநேர ஊரடங்கு காரணமாக இன்று (20-ந் தேதி) முதல் இரவுநேர பஸ்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் காலையிலும், பகல் நேரத்திலும் வெளியூர் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப தேவையான அளவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். காலை 6 மணி முதலே பஸ்கள் ஓடத்தொடங்கி விடும். வெளியூர் செல்லும் பயணிகள் ஏராளமானோர் ஏற்கனவே இரவுநேர பஸ்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் முன் பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் பகல் நேரத்தில் பயணம் செய்ய விரும்பினால் அதற்கேற்ப டிக்கெட் மாற்றி வழங்கப்படும். பகல் நேர பஸ்களிலும் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் முக்கிய இடங்களுக்கு பகல் நேரத்தில் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் ஆம்னி பஸ் களிலும் ஏற்கனவே முன் பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் பயணம் செய்ய விரும்பினாலும் அதற்கேற்ப டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து