முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் : பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      உலகம்
Trump

Source: provided

நியூயார்க் : ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் என்று பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் பெய்ஜிங்கில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை சீன ஜின்பிங்குடன் ரசிய அதிபர் புதின் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் பார்வையிட்டனர். அமெரிக்காவிற்கு எதிராக சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா இணைந்து சதி செய்வதாக அதிபர் ட்ரம்ப் நேரடியாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள இராணுவ தயார்நிலையை கணிசமாக அதிகரிக்க அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு (பென்டகன்) உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனா, ரஷ்யா, வட கொரியா மூன்று நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு அமெரிக்காவிற்கு எதிராக வலுவடைந்து வருவதற்கான அறிகுறி என்று வாஷிங்டன் நம்புகிறது. ட்ரம்ப்பின் உத்தரவுகளை பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸிடம் பேட்டியளித்த ஹெக்செத், "இந்த நடவடிக்கைகள் போரை நாடுவதற்காக அல்ல, மாறாக வீரர்களின் மன உறுதியை புதுப்பிக்க மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக, முந்தைய நிர்வாகத்தின் பலவீனமான கொள்கைகள் காரணமாக ரஷ்யாவும் சீனாவும் நெருக்கமாகிவிட்டன. இது அமெரிக்கத் தலைமை இல்லாததற்கான சான்றாகும். அதனால்தான் ஜனாதிபதி ட்ரம்ப் ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், தடுப்பு திறனை மறுசீரமைக்க தயாராக இருக்கவும் உத்தரவிட்டுள்ளார். நாங்கள் மோதலை விரும்பவில்லை. சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு நாங்கள் போரைத் தவிர்க்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து