முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கொரோனா பாதிப்பினால் நேற்று காலமானார்.

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர் சோலி சொராப்ஜி.  கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.  அவருக்கு வயது 91.  இந்தியாவின் உயரிய பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர்.  

கடந்த 1930-ம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர் பாம்பே ஐகோர்ட்டில் வழக்கறிஞர் பயிற்சியை பெற்றுள்ளார்.  இதன் பின்னர் கடந்த 1971-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞரானார்.  கடந்த 1989-ம் ஆண்டு அவர் அட்டர்னி ஜெனரலானார்.  இதன்பின்பு கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மீண்டும் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

சோலி சொராப்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 

சோலி சொராப்ஜி மிகச் சிறந்த வழக்கறிஞரும், அறிஞருமாவார். வறியவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சட்டத்தின் மூலம் உதவுவதில் முன்னணியில் இருந்தார். 

இந்தியாவின் அட்டார்னி ஜெனரலாக அவர் ஆற்றிய அரும்பணிக்கு என்றும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து