எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. பிப். 21-மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் சரக்கு சேவை வரி சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பாரதீய ஜனதாக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியை அமுல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவு மிகவும் முக்கியமானது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நிதி சம்பந்தமான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான யஷ்வந்த் சின்கா கூறுகையில் மத்திய அரசு தவறான முறையில் செயல்பட முயற்சி செய்கிறது என்றார்.
குஜராத்தில் ஒரு அமைச்சருக்கு எதிராக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அந்த அமைச்சரை நீக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பா.ஜ.க. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளதற்கும் யஷ்வந்த் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பதற்காகத்தான் இந்த மசோதாவை தாக்கல் செய்ய பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவிக்கிறதே ஒழிய மற்ற காரணம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



