முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை பெற்று தேவையை நிறைவேற்றி வருகிறது.

தமிழகத்துக்கு கூடுதலான ஆக்சிஜனை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து தமிழ் நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தொடக்கத்தில் 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது படிப்படியாக 419 மெட்ரிக் டன்னாகவும், பின்னர் 519 மெட்ரிக் டன்னாகவும் அதிகரிக்கப்பட்டது. நாங்கள் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை இரவு மத்திய அரசு 650 மெட்ரிக் டன்னாக அதிகரித்து ஒப்புதல் அளித்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் டோல்வி பகுதியில் இருந்து 60 மெட்ரிக் டன்னும், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள லிண்டோவில் இருந்து 46 மெட்ரிக் டன்னும், ஒடிசா மாநிலம் கலிங்கா நகரில் இருந்து 50 மெட்ரிக் டன்னும், ரூர்கேலாவில் உள்ள செயிலில் இருந்து 50 மெட்ரிக் டன்னும் ஆக்சிஜன் வந்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மாநில அரசுக்கு 25 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெறப்படுகிறது.

மேலும் சிங்கப்பூரில் இருந்து கடல் வழியாக 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விசாகப்பட்டினத்துக்கு கடல் வழியாக வருகிறது. அங்கிருந்து சாலை மார்க்கமாக தமிழ்நாட்டுக்கு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து