முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது : சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுவை மாநிலத்திற்கான 15-வது சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இதனையடுத்து 15-வது சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று புதன்கிழமை கூடுகிறது. அன்றைய தினம் சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். 

இதற்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.  தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். செல்வம் பேரவை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். புதுச்சேரி பா.ஜ.க. அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர். செல்வம் ஒருமனதாக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 

இதனை அடுத்து பகல் 12.10 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் முனுசாமியிடம், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஆர்.செல்வம், பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இதனை முதல்வர் என். ரங்கசாமி முன்மொழிந்தார். சட்டப்பேரவை பா.ஜ.க. குழு தலைவர் ஏ.நமச்சிவாயம் வழிமொழிந்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரும்பான்மை உள்ள ஆளும் கூட்டணி கட்சி சார்பில் இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், ஒருமனதாக பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து